மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛விக்ரம்'. நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் வெளியாகி இருப்பதாலும் படம் சிறப்பாக வந்திருப்பதாலும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதால் என்னவோ இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசு வழங்கி வருகிறார்.
நேற்று இயக்குனர் லோகேஷிற்கு சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான லெக்ஸ் ரக காரை பரிசாக அளித்தார். அவரின் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு பைக் பரிசளித்தார். இந்நிலையில் இன்று இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலெக்ஸ் என்ற வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு உயர் ரக கை கடிகாரங்களில் ஒன்றான ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக வழங்கி உள்ளார் கமல். இதற்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா, இது மாதிரியான தருணங்கள் வாழ்க்கையை அழகாக்கின்றன'' என கூறியுள்ளார். இது தொடர்பான போட்டோக்களை வெளியாகி வைரலாகி வருகின்றன.