அரசியலில் ஜீரோ-வைக் கண்டுபிடித்த பவன் கல்யாண் : ராம் கோபால் வர்மா காட்டம் | மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம் | வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம் | கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார் | பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம் | மம்முட்டி படத்துக்கு திடீர் எதிர்ப்பு | வாங்கிய அடி, உதை, காயங்கள் எல்லாமே நிஜம் : கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி | நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் | ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன் | அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி |
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார். பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், கார்த்திக் ஆர்யன், நடிகை கத்ரீனா கைப் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படியும், அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.