அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் அவருக்கு போதை மருந்து கொடுத்து வந்தாகவும், போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், சுஷாந்த் தற்கொலைக்கு ஒரு காரணமாக இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இது தொடர்பான வழக்கும், வழக்கு விசாரணையும் நடந்து வருவதால் ரியா சக்ரபோர்த்தியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு அவரது வெளிநாட்டு பயணங்கள் தடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அபுதாபியில் நடக்கும் ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டியது இருப்பதால் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து அவர் விருது விழாவில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு திரும்ப வசதியாக 4 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதே போல பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிபிட்ட ஒரு மத பிரிவினரின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினார் என்றும், அந்த நிகழ்ச்சியும் குறிபிட்ட மத பிரிவினரை அவதூறு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து ரவீனா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் 295ஏ பிரிவை (மத கலவரம் தூண்டுதல்) நீக்க வேண்டும், தங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வருகிற டிசம்பர் 5ம் தேதி வரை ரவீனா டான்டன் மீது எந்தவித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த விஷயம் சம்பந்தப்பட்ட இரு நடிகைகளுக்கும் சற்று ஆறுதலை அளித்துள்ளது.