டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் விஷாலின் 'ஆக்சன்', தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது பொன்னியின் செல்வன், கேப்டன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் கோட்சே என்கிற படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் இதுவரை நடித்துள்ள ஐஸ்வர்ய லட்சுமி தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஆம், சாய்பல்லவி நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் கார்கி என்கிற படத்தின் இணை தயாரிப்பாளர் ஐஸ்வர்ய லட்சுமி தான்.
நேற்று சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஐஸ்வர்ய லட்சுமி, கார்கி படத்தின் மூலம் தான் இணை தயாரிப்பாளராக மாறியுள்ள தகவலையும் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, 'சாய்பல்லவி நடிக்கும் கார்கி படத்தை தயாரிப்பதில் பெருமைப்படுகிறேன்.. மேலும் உங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும் உங்களுடன் பணி புரிவதற்கும் கிடைத்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்”.
இந்த படத்தை நிவின்பாலி தமிழில் நடித்த ரிச்சி படத்தை இயக்கிய கௌதம் ராமச்சந்திரன் இயக்குகிறார் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.