ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

இயக்குனர் வசந்தபாலனால் 'வெயில்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என தனது முதல் பார்வையிலேயே தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிக்கி பிரியங்கா. இடையில் சில காலம் பட வாய்ப்புகள் குறைந்தாலும், சமீபகாலமாக மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் தற்போது தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார் பிரியங்கா.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் கதாநாயகியாக நடித்து வெளியான அந்தாக்ஷரி என்கிற சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் பிரித்விராஜ் நடித்த ஜனகனமன படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரியங்கா, அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மே-20ல் வெளியாக உள்ள ட்வல்த் மேன் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் போல, பிரியங்கா ஒருவர் மட்டுமே தனியாக நடித்துள்ள படம் ஒன்றும் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.