லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதன்பின் 'சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மே 8ம் தேதி அன்னையர் தினத்தன்று தனது அம்மாவுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரைப் பரிசளித்துள்ளார். அவருடைய அம்மாவுக்குப் பிடித்தமான நீல நிறத்திலேயே காரை வாங்கியுள்ளார். புதிய காருடன் பெற்றோருடன் இருக்கும் ராஷிகண்ணாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. அம்மாவுக்கு சர்ப்ரைசாக இந்தப் பரிசைத் தந்துள்ளார் ராஷி கண்ணா.
அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு அன்பு முத்தங்களைத் தந்த புகைப்படத்தைப் பகிர்ந்து “அன்னையர் தினம், இன்றும், என்றென்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.