மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு அவர்களது ஊரில் கிடைக்காத வாய்ப்புகளும், பிரபலமும் வேறு ஊரில்தான் கிடைக்கும். இங்கிருந்து தெலுங்கிற்குப் போய் பிரபலமானவர் த்ரிஷா. அவருக்கடுத்து சமந்தா, சாய் பல்லவி ஆகியோர் அங்கு மிகவும் பிரபலமானார்கள்.
தமிழில் சாய் பல்லவிக்கு சரியான வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 'தியா, மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்கள் அவருக்கு சுமாரான வெற்றிகளையே தந்தன. அவர் தமிழில் கடைசியாக நடித்த 'என்ஜிகே' படம் 2019ல் வெளிவந்தது.
மூன்று வருடங்களுக்குப் பிறகு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை நேற்று சாய் பல்லவியின் பிறந்தநாளில் வெளியிட்டார்கள். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கில் உருவாகியுள்ள 'கார்கி' படத்திலும் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இனி, தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.