ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! |

தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கும் படம் சீதா ராமம். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோர் ராமனாகவும் சீதையாக நடிக்கின்றனர். ஸ்வப்னா சினிமா நிறுவனத்தின் சார்பில் அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் தயாரிக்கிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா அப்ரீனா என்கிற காஷ்மீர் முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்துக்கு பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷால் சந்திரசேகர் இசை அமைப்பில் உருவாகி உள்ள முதல் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. கார்க்கி பாடலை எழுதியுள்ளார். எஸ்.பி.பி.சரண் தந்தையின் குரலில் பாடியுள்ளார். அவருடன் ரம்யா பெஹாரா பாடி உள்ளார்.
இந்த படம் 60களின் பின்னணியில் நடந்த காதல் கதையாக உருவாகி உள்ளது. போரூற்றி வளர்த்த காதல் கதை என்பதுதான் படத்தின் டேக் லைன்.