ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி, ஓ சொல்றியா மாமா என இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார்.
இந்த நிலையில் புஷ்பா -2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் -2 படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது சுகுமாரும் புஷ்பா- 2 படத்தை அந்த படத்துக்கு இணையாக பிரமாண்டமான காட்சிகளை கொண்டு உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.