படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய அவதார் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2009ஆம் ஆண்டு வெளியான அந்த படம் அமெரிக்க மதிப்பில் 2500 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. அவதார் முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்த பாகங்களை இயக்க உள்ளதாக அறிவித்தார் கேமரூன். பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அவதார் : தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைத்திருக்கிறார்.
முதல் பாகத்தில் முழுமையாக ஒரு வனத்திற்குள் நடப்பது போன்று காட்சி அமைத்து இருந்த ஜேம்ஸ் கேமரூன், இரண்டாம் பாகத்தை கடற்கரை மற்றும் கடலுக்குள் நடக்கும் கதையில் உருவாக்கி இருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வியக்கத்தக்க காட்சிகளும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளும் கற்பனைக்கு எட்டாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலர் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. அவதார் எனும் புது உலகத்தை காண்பித்த ஜேம்ஸ் கேமரூன் அடுத்து அவதாரின் மற்றொரு உலகத்தை பிரம்மிக்க வைக்கும் வகையில் கொடுக்க உள்ளார் என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
அவதார் 2 படம் உலகம் முழுக்க 160 மொழிகளில் டிச., 16ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.