சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கவுதம் மேனன், சிம்பு, திரிஷா கூட்டணியில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? எப்போது உருவாகும்? என்று சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவுதம் மேனனிடத்தில் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா-2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருக்கிறார். அதோடு கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்று ஒரு குறும்படத்தை எடுத்துள்ளேன். இது அப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.