கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய் போல விளம்பர படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிராமல், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் விளம்பர படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் ரெட் பஸ். ராபிடோ என போக்குவரத்து சம்பந்தமான விளம்பரங்களில் நடித்து வந்த அல்லு அர்ஜுனை தேடி மிகப்பெரிய நிறுவனம் ஒன்று தங்களது புகையிலை தயாரிப்பு ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காக அணுகியுள்ளனர். இதற்காக கோடிகளில் சம்பளம் தரவும் அவர்கள் தயாராக இருந்தனர்..
ஆனால் இரண்டாவது யோசனைக்கே இடம் தராமல் அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார் அல்லு அர்ஜுன். காரணம் இந்த விளம்பரத்தில் நடித்து அந்த புகையிலை தயாரிப்பை விளம்பரப்படுத்தினால் தனது ரசிகர்களே அவற்றை அதிகம் பயன்படுத்துவதற்கு தானே வழி அமைத்து கொடுத்தது போல ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் இதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.