புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு சினிமாவில் 80களில் முன்னணி தயாரிப்பாளராகவும், பைனான்சியராகவும் இருந்தவர் நாராயண் தாஸ் நரங். தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை தலைவராகவும் பணியாற்றினார். ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி, நாக சௌர்யா நடித்த லக்ஷ்யா படங்களை தயாரித்திருந்தார் நாகார்ஜுனா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் தி கோஸ்ட் திரைப்படம் மற்றும் தனுஷ், சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் நடிக்கும் படம் ஆகியவற்றை தயாரித்து வந்தார். தற்போது தயாரிப்பு பணிகளை மகன் சுனில் நரங் கவனித்து வருகிறார்.
76 வயதான நாராயண் சினிமா மற்றும் தொழில்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாக மூச்சு திணறல் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயண் தாஸ் நரங் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரை பிரபலங்களான மகேஷ் பாபு, சிரஞ்சீவி, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாராயண் தாஸ் மறைவுக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எங்களின் அன்புக்குரிய தயாரிப்பாளர் ஸ்ரீ நாராயண் சிங் தாஸ் மரணமடைந்த தகவலை கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். சுனில் நரங் சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். என பதிவிட்டுள்ளார்.