'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
இசை அமைப்பாளர் இளையராஜா நூல் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில் அம்பேத்கரின் சிந்தனைகளை பிரதமர் மோடி நனவாக்கி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அம்பேத்கரையும் மோடியையும் இணைத்து பேசுவதா என்று இளையராஜாவை ஒரு சில அமைப்புகளும், ஒரு சிலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழக தலைவருமான விஜயகாந்த் வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தைச் சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோல தான் இங்கு யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.
இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.