''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகை ரேவதி இயக்கி, தேசிய விருது பெற்ற ‛மித்ரு மை பிரண்ட்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம சினிமாவுக்கு அறிமுகமானவர் வி.பிரியா. பின்னர் பிரகாஷ்ராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கண்ட நாள் முதல் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு ‛கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தம் என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார்.
இந்த தொடரின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது: வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறேன். கண்ட நாள் முதல் படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதை தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜு சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு. எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார். அவரை தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இந்த ஒரிஜினல் சீரீஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார் பிரியா.