கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கில் திலீப்புடன் அவரது மனைவி உள்ளிட்டவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இரு வழக்கிலும் தொடர்புடைய 11 ஆயிரத்து 161 வீடியோக்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. செல்போனில் அழிக்கப்பட்ட இந்த வீடியோக்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதுதவிர லட்சத்தை தாண்டிய போட்டோக்களும் மீட்கப்பட்டுள்ளதாம்.
இந்த வீடியோ மற்றும் ஆடியோ, போட்டோ ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பிக்க விவாரணை அதிகாரிகள் 3 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார்களாம். காரணம் 6,682 வீடியோக்கள், 10,879 ஆடியோக்கள் மற்றும் 65,384 புகைப்படங்களை சோதிக்க இந்த கால அவகாசம் தேவைப்படுகிறதாம். திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் இந்த வழக்கில் இருந்து அவர் தப்ப முடியாது என்கிறார்கள்.