தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரணும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளார்..
இந்தப்படத்தில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் மட்டுமே சுமார் 25 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் பாடல் காட்சி ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது.
பலே பலே பஞ்சாரா என்கிற அந்த பாடலில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இணைந்து ஆடும் ஆட்டம் இன்னொரு நாட்டுக்கூத்து போல படு வேகமான நடனமாக இருக்குமென சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக மகதீரா படத்தில் ராம்சரணுடன் ஒரு பாடலில் கடைசி சில நொடிகள் மட்டும் சிரஞ்சீவி இணைந்து ஆடி இருந்தார். ஆனால் முதன்முறையாக இவர்கள் இருவரும் இந்த பாடலில் முழுவதும் இணைந்து ஆடி உள்ளார்கள் என்பது இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று..




