லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'கேஜிஎப் 2' படம் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக படக்குழு பல ஊர்களுக்குச் சென்று பிரமோஷன் செய்து வருகிறது. படக்குழுவினர் ஒவ்வொருவரும் பேட்டிகளைத் தருவதில் பிஸியாக இருக்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் மிகப் பெரிய கவனம் பெறும் விதத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணியான ஆர்சிபி அணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது 'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனமான ஹம்பலே பிலிம்ஸ். இந்தப் புதிய கூட்டணி பற்றிய அறிவிப்வை வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் டிரைலருடன் ஆர்சிபி அணி வீரர்களான அதன் கேப்டன் டூ பிளிசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகம்மது சிராஜ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் பங்கேற்றள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.