பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! |
வலிமை படத்திற்கு பிறகு அஜித்தின் 61வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. வலிமை படத்தின் தாமதம், படப்பிடிப்பில் நடந்த விபத்து, படம் பற்றிய இருவித விமர்சனம் என வலிமை அஜித்துக்கு கொஞ்சம் வலி தந்த படமாகத்தான் அமைந்தது. அதோடு அஜித்துக்கு இதுவரை 7 ஆபரேஷன்கள் வரை நடந்துள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டும், 61வது படம் எந்த சிக்கலும் இன்றி நிறைவடைய வேண்டும், மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனைவி ஷாலினியின் வேண்டுதல்படியும் அஜித் பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்து படங்கள் இணையதளத்தில் வெளியானது.
ஆனால் இந்த வழிபாட்டுக்கு முன்னதாக அஜித் 15 நாட்கள் வரை பாலக்காடு பகுதியில் உள்ள பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருந்து இயற்கை வைத்தியம் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெறுகிறவர்கள் கடைசி நாளில் கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.