தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
உலக புகழ்பெற்ற சின்னத்திரை தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். எச்பிஓ சேனலில் 7 சீசன்களாக வெளியான இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரும் இப்போது உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் ஆகிவிட்டனர். சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்த தொடரின் கடைசி சீசன் மதர் ஆப் டிராகன் கொல்லப்படுவதோடு முடிந்தது.
அதனால் இந்த கதையை அப்படியே தொடர முடியாது என்பதால் புதிய கதையாக உருவாக்கி உள்ளனர். கேம் ஆப் த்ரோன்ஸ் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி அதனை ஹவுஸ் ஆப் டிராகன் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள். இதில் முற்றிலும் புதியவர்கள் நடிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எச்பிஆ சேனலில் ஒளிபரப்பாகிறது. அதன்பிறகு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.