நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் | 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை |
மாதவன் முதன் முறையாக தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் ராக்கெட்டரி : தி நம்பி எபெக்ட். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டு சட்டபோராடத்திற்கு பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.
இந்த படத்தில் நம்பி நாராயணன் பாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.
இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா, செர்பியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தயாரான இப்படம் உலகமெங்கும் வருகிற ஜூலை 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோசன் பணிகளை மாதவன் தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2022ல் இதன் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நம்பி நாராயணன் பேசியதாவது: எனது வரலாற்றை படமாக்க பலர் முன் வந்தார்கள். ஆனால் பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அந்தவகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. மாதவன்தான் என் கதையை படமாக்க தகுதியான நபர் எனக்கு தோன்றியதால் சம்மதித்தேன்.
ஒரு ராக்கெட் ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் கருத்து. ஒருவரால் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், நீங்கள் சோர்ந்து போய் விடக்கூடாது, நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். என்ற செய்தியை இளைஞர்களுக்கு இந்த படம் தெரிவிக்கும். என்றார்.