ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விஜய்சேதுபதியால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள தகவல் திடீரென வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு 'வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெற்றிருப்பதாகவும், இந்த அமைப்பை பின்னணியில் இருந்து இயக்குவது விஜய்சேதுபதி என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் இ.பா.வீரராஹவன் கூறியிருப்பதாவது: புதுச்சேரியை சேர்ந்த நான் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். சமூக சேவையில் அக்கறை கொண்ட நான் 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்சப் குழுக்கள் மூலம் எனது சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வந்தேன்.
இத்தகவலை அறிந்த விஜய்சேதுபதி அவர் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என்னை பங்கேற்க செய்தார். அதன் பிறகு எனது பணிகளை தொடர்ந்து செய்ய உதவி செய்வதாக வாக்களித்தார். இதனால் எனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து முழுநேர பணியாக இதனை செய்ய ஆரம்பித்தேன்.
இதற்கு ஆதரவு பெருகவே இதனை ஒரு அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனமாக மாற்றச் சொன்னார். அதன்படி 2019ம் ஆண்டு வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் புதுச்சேரி தவளகுப்பத்தில் உள்ளது. இங்கு பணியாற்றும் முழுநேர பணியாளர்களுக்கு விஜய்சேதுபதி மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் இந்த மார்ச் மாதம் வரை ஒரு லட்சத்து 133 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மூலம் இணைந்துள்ளனர். இதுவரை 73 சுயதொழில் முனைவர்களை உருவாக்கி உள்ளோம், 17 வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளோம்.
இந்தத் தகவலை வெளியில் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் கண்டிப்பான முறையில் விஜய்சேதுபதி என்னைத் தடுத்து வந்தார். அவர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவரது இந்த பெரிய பணி உலகத்துக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இப்போது சொல்கிறேன். என்கிறார்.