ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அஜித் நடித்த வலிமை படம் கடந்த மாதம் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. எச்.வினோத் இயக்கி இருந்தார், போனி கபூர் தயாரித்திருந்தார். படம் குறித்து இருவகையான விமர்சனங்கள் வந்தபோதும் வசூல் நன்றாகவே இருந்தது. வெளியான ஒரு மாதத்தில் வலிமை ஓடிடியில் வெளியிடப்பட போவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் வலிமை படம் தியேட்டர்களில் ஓடி முடித்த பிறகு வலிமை படத்தின் கதை 2016 ஆம் ஆண்டு வெளியான தனது மெட்ரோ படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூறி, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். மேலும் படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடைகோரி கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு போதுமான முகாந்திரம் இல்லை என்று கூறி வலிமை படத்தை, ஓடிடியில் வெளியிட எந்த தடையும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் நாளை (மார்ச் 25) வலிமை படம் ஓடிடியில் வெளியாகிறது.