'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

விஷால் தற்போது லத்தி படத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது.
விஷால் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தான் இந்த படத்தையும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தயாரிப்பாளர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது.
ஒருவேளை விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அந்த படத்தை தயாரிக்கலாம் என தீர்மானித்தால் மட்டுமே தொடர்ந்து அந்த படம் படப்பிடிப்பு என்கிற நிலைக்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது.




