ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலரது நடிப்பில் பிரம்மாண்ட வெளியீடாக 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 7ம் தேதி வெளியாக வேண்டிய படம் கொரோனா அலை காரணமாக தள்ளிப் போடப்பட்டு இப்போதுதான் வெளியாக உள்ளது. இருப்பினும் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' அலை காரணமாக ஏற்கெனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களின் நிலை தடுமாற்றம் கண்டுள்ளது. தமிழில் 'எதற்கும் துணிந்தவன்', கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் கடைசி கமர்ஷியல் படமான 'ஜேம்ஸ்' ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஹிந்தியில் 'காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கான தியேட்டர்களும் குறையும் என்கிறார்கள். நாளையுடன் 'வலிமை' படத்தின் ஓட்டமும் முடிவுக்கு வருகிறது. மார்ச் 25ல் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
'ஜேம்ஸ்' இயக்குனரான சேத்தன் குமார் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜேம்ஸ்' படத்தை தியேட்டர்காரர்கள் தூக்கக் கூடாது என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அந்தப் படம் பற்றிய 'பாசிட்டிவ் டாக்' அதிகம் வந்தால் 'பாகுபலி 2' படத்தை விடவும் அதிக வசூல் செய்யும் என தெலுங்குத் திரையுலகில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.