அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் தலைவர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் சங்கத்தின் மரபுபடி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். எங்களின் பிரச்னைகளை அக்கறையோடு கேட்டறிந்த முதல்வர், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். என்றார் நாசர்.
பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது: நடிகர் சங்கம் வழக்குளை சந்திக்காமல் தேர்தல் நடந்த அன்றே நாங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்திருந்தால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்ககப்பட்டிருக்கும். ஏற்கெனவே 60 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க 21 கோடி தேவை. முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிமுடிப்பதே எங்களின் முதல் பணியாக இருக்கும். என்றார்.