நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் சல்யூட். அவர் முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருந்தார். இந்த படம் ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், இந்த மாதம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தியேட்டர்களுக்கு பதிலாக கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது. துல்கர் சல்மான் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
அவரது இந்த முடிவு தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இனி நாங்கள் துல்கர் படத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என போர்க்கொடி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு பிரச்சினையை கிளப்பிவிட்டு உள்ளது. இது குறித்து வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தீர்மானம் பற்றி துல்கர் சல்மான் கூறும்போது, "சல்யூட் படத்தை நாங்கள் எடுத்தபோது கொரோனா தாக்கம் துவங்கி இருந்தது. அதனால் இந்த படம் தியேட்டர்களில் வெளியாக வாய்ப்பு உள்ளதா என்கிற சந்தேகத்துடன் தான் இந்த படத்தை நாங்கள் எடுத்தோம். சொல்லப்போனால் ஓடிடியில் வெளியிடுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய குரூப் திரைப்படத்தை தியேட்டர்களில் தான் வெளியிட்டோம். அந்த படத்தின் மூலம் அவர்கள் மிகப்பெரிய லாபமும் அடைந்தார்கள். அந்த லாபத்தில் நாங்கள் ஏதாவது பங்கு கேட்டோமா? இல்லை அவர்கள் தான் கொடுத்தார்களா? ஆனால் இப்போது சல்யூட் படத்தை ஏன் ஓடிடியில் வெளியிட்டீர்கள் என்று போர்க்கொடி தூக்கினால் அதை முறைப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.