‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

சித்தா படத்தை தொடர்ந்து எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. ஒரே இரவில் நடக்கும் கதையாக விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் திரில்லராக வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களையும் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் சிக்கல்களை சந்தித்தாலும் கூட அதையெல்லாம் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் கதை சொல்லப்பட்ட விதமும் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதமும் படத்தின் விறுவிறுப்புக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
சமீப வருடங்களாக விக்ரமிற்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி படங்கள் எதுவும் அமையாத நிலையில் வீர தீர சூரன் அந்த குறையை போக்கியுள்ளது என்று உறுதியாக சொல்லலாம். இந்த நிலையில் தனது தந்தைக்கு இப்படி வீரதீர சூரன் என்கிற ஒரு வெற்றி படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி கூறியுள்ள விக்ரமின் மகன் துருவ் தனது தந்தையுடன் சிறு வயதில் நீச்சல் குளம் ஒன்றில் எடுக்கப்பட்ட விண்டேஜ் புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் அடுத்தபடியாக ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.