'96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் |
மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் எம்புரான் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தொடரும். ஆபரேஷன் ஜாவா புகழ் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்ப பின்னணியில் உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளனர். மே மாதம் ரிலீஸ் ஆகும் விதமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது முன்கூட்டியே வரும் ஏப்ரல் 25ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம், முதல் பாகமான லூசிபரை போலவே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் அதை ஈடு கட்ட தவறியதும் தேவையில்லாமல் மத சர்ச்சையில் இந்த படம் சிக்கியதும் படத்திற்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது. அதேசமயம் படத்தின் வசூல் 200 கோடியை கடந்துள்ளது.
இந்த நிலையில் இதை சரி கட்டுவதற்காகத்தான் தொடரும் படத்தை இரண்டு வாரங்கள் முன்கூட்டியே ரிலீஸ் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் மம்முட்டி நடித்துள்ள பஷூக்கா திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருப்பதால் 15 நாட்கள் கழித்து தொடரும் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.