ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் |
தமிழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தவர் தற்போது மீண்டும் விஜய்யுடன் பீஸ்ட் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். மேலும் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் தோல்வி அடைந்து விட்டதால் அது தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே.
அதோடு அடுத்தபடியாக விஜய்யுடன் தான் நடித்துள்ள பீஸ்ட் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், விஜய் மிகவும் அமைதியானவர். பெரும்பாலான நேரங்களில் தன்னுடன் பேசிக் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் பெண்களை அவர் கவனித்து கொள்ளும் விதம் அவர் மீது நமக்கு மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும், இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு புதிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்று நம்புவதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.