மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த படத்தில் நெகட்டிவ் சாயல் கொண்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரேம்ஜி நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக இந்த படத்தின் மூலம் இணைந்து நடிக்கிறார் பிரேம்ஜி