பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி |

தமிழில் மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.. அதன்பின் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாக மாறிய இவர் தமிழ், மலையாள, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்தார். அந்த வகையில் கடந்த 2017ல் மலையாளத்தில் பிரித்விராஜ் ஜோடியாக ஆடம் ஜான் என்கிற படத்தில் இணைந்து நடித்தார் பாவனா.
அந்த சமயத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிய அவர் அதன்பிறகு பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆனதுடன் கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்த நிலையில் 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் பாவனா. படத்திற்கு 'என்திக்காக்காகொரு பிரேமந்தார்னு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மம்முட்டி, பாவனா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை அடில் மைமூநாத் அஷ்ரப் என்பவர் இயக்குகிறார்.