100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
வெள்ளித்திரையில் அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமானாலும் கூட, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, யாஷிகா ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகி உடன் பயணித்த அவரது தோழி மரணம் அடைந்தார்.. காலில் அடிபட்ட யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்து வழக்கம்போல தனது வேலைகளை கவனித்து வருகிறார்..
அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், ரசிகர்களின் கேள்விகளுக்கு தவறாமல் பதிலளித்து வருகிறார். அப்படி ஒரு ரசிகர் உங்களிடம் இருந்த ஊதா நிற புல்லட் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த யாஷிகா, “அந்த பைக் வீட்டில் தான் இருக்கிறது. எனது அண்ணன் இப்போது அதை உபயோகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான தகவல்.. இனிமேல் நான் கார் மற்றும் பைக் ஓட்ட போவது இல்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.
அதற்கு ரசிகர்கள் சிலர் எதற்காக இந்த அதிர்ச்சி முடிவு என்று கேட்டதற்கு, “என் தோழியை நான்தான் கொன்று விட்டேன் என உங்களில் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.. அதனால்தான் இந்த முடிவு” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்.