2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் |
யாவரும் நலம், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் தேங்க்யூ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டவர், மீண்டும் அதே நாகசைதன்யாவுடன் கைகோர்த்து வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். இதில் நாகசைதன்யா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது..
இந்த வெப்சீரிஸில் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்ரம் குமார் உடன் நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு ரசிகையாக பார்வதியுடன் பிரியா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது.