'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
இயக்குனர் சுந்தர்.சி சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், தற்போதும் அவரது படங்களுக்கு என தனி ரசிகர் வட்டமும், வரவேற்பும் இருக்கிறது. காலங்கள் மாற மாற அதற்கேற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவையில் புதுப்புது பணிகளை கையாளுவது சுந்தர்.சியின் உத்திகளில் ஒன்று. அதேபோல சுந்தர்.சியின் படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும்..
அந்தந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து அவரது படங்களில் இடம் பெறுவார்கள் அந்த வகையில் அவரது ஆரம்ப கால படங்களில் கவுண்டமணி தொடர்ந்து இடம்பெற்று வந்தார், அவருக்குப்பின் வடிவேலு.. வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கிய நிலையில் அவரை தொடர்ந்து சந்தானத்துடன் கூட்டணி அமைத்தார்.
சந்தானம் ஹீரோவான உடன் சூரி, சூரியை தொடர்ந்து யோகிபாபு.. தற்போது யோகிபாபு பிஸியாக உள்ள நிலையில் புதிதாக காமெடியில் வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ என காமெடியை மட்டுமல்லாது காமெடி நடிகர்களையும் தனது படங்களில் அப்டேட் செய்து வருகிறார் சுந்தர்.சி. தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கூட்டணியில் அவர் இயக்கி வரும் படத்தில் ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியானால் இவருக்கு இன்னும் வரவேற்பு அதிகரிக்கும் என்பது நிச்சயம் என்கிறார்கள் படக்குழுவினர்..