சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ராதேஷ்யாம்' படம் அடுத்த வாரம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த படத்தின் பேனர்களில் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை அரை குறையாக ஒட்டியிருந்தனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட்தான் வெளியிடுகிறது என எப்போதோ தகவல் வெளியானது. அப்படியிருக்கையில் பிளக்ஸ் பேனர்களில் நிறுவனத்தின் பெயரை சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது 'மாமன்னன்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பையே 'கட்' அடித்துவிட்டு வந்தார் உதயநிதி. அவர் பேசும் போது இயக்குனர் மாரி செல்வராஜிடம் கேட்டுக் கொண்டுதான் 'கட்' அடித்து வந்தேன் என்றார். மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் 175 தியேட்டர்களில் வெளியாகப் போகிறது என்றார்.
சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் மார்ச் 10ல் அதிக தியேட்டர்களில் வெளியாவதால் 'ராதேஷ்யாம்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இது இப்படத்தைப் பொறுத்தவரையில் குறைவான தியேட்டர்கள்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.




