இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கதாநாயகனாக சிம்புவுக்கு கைகொடுத்த படமாக மட்டுமல்ல, ஹீரோ சிம்புவா, இல்லை எஸ்ஜே சூர்யாவா என கேட்கும் அளவுக்கு இருவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு
இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமை இரண்டையும் நடிகர் ராணாவின் தந்தை தனது சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பாக கைப்பற்றியுள்ளார். அதேசமயம் டப்பிங் செய்வதை விட ரீமேக் செய்வதில் தான் அதிக ஆர்வமும் காட்டி வருகிறாராம்.
தெலுங்கில் நாகசைதன்யா - பூஜா ஹெக்டே இருவரும் நடிக்க, தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, எஸ்.ஜே.சூர்யாவுக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்த அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ராணா நடிப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..