மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
அஜித் நடித்து நேற்று வெளியான 'வலிமை' படத்தில் துணை கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். அவர்களில் கவனிக்கப்படும் ஒருவராக டிவி நடிகை சைத்ரா ரெட்டி இருந்தார்.
படம் இணையக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் சைபர் கிரைம் பிரிவு அதிகமாகக் காட்டப்பட்டது. அதில் சைபர் கிரைம் பெண் அதிகாரியாக சைத்ரா நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பலரும் யார் இவர் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். மேலதிகாரியான அஜித் சொல்லும் ஆலோசனைகளை உடனடியாகக் கேட்டு துறுதுறுவென நடித்திருந்தார் சைத்ரா.
அஜித் படத்தில் நடிக்க தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்காதா என பலர் காத்திருக்க தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை சைத்ரா சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். 'வலிமை' படத்திற்கும் தனக்கும் கிடைத்துள்ள வரவேற்பு சைத்ராவுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அது குறித்து, “வலிமை' படத்திற்காக எனக்கு பல மெசேஜ்கள், போன் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த அளவுக்கு ரீச் ஆகும் என நான் நினைக்கவில்லை. என் மீது மிகவும் அன்பு செலுத்தும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றி. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.