பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி | ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகி மீது முதல் புகார் | 'திரிஷ்யம் 3' ஹிந்தியில் வேறு மாதிரி இருக்கும் ; இயக்குனர் அபிஷேக் பதக் | ரேடியோ நாடகத்துக்கு குரல் கொடுத்த மோகன்லால் | எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' |

சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்திருந்த ஒரு குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை ஜெயசுதா. படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஜெயசுதாவிடம் நீங்கள் ஏன் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயசுதா, “அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வலிமை படத்திலேயே வந்தது. அந்த படத்திற்காக ஒருநாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஏற்பட்ட பயத்தால் அந்த படத்தில் நடிக்காமல் விலகி விட்டேன்” என்று கூறியுள்ளார். அஜித்தின் அம்மாவாக அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் பின்னர் நடிகை சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




