தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? | தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பிய கார்த்திக் சுப்பராஜ்! | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை |
நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அவரது 54வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் ‛சிங்கப்பூர் சலூன், தி கோட்' ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.