ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
2002ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வெளிவந்த ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். ஸ்ரீகாந்த் ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். அதன் பிறகு பார்த்திபன் கனவு, நண்பன், கனா கண்டேன், வர்ணஜாலம், போஸ், உயிர், வல்லமை தாராயோ, இந்திரவிழா, ஏப்ரல் மாதத்தில், துரோகி, மந்திர புன்னகை, நம்பியார் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது உன் காதல் இருந்தால், காக்கி, மஹா, சம்பவம், தீங்கிறை, பெட் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
திரைப் பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஸ்ரீகாந்த் திரையில் தனது முதல் ஜோடியான பூமிகாவை சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பிப் 22, 2002 அன்று நான் ஒரு நடிகனாக பிறந்த நாள். எனக்கு நடிகன் என்கிற அடையாளத்தை வழங்கியதற்காக இயக்குநர் சசி மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன், ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி. என்கிறார் ஸ்ரீகாந்த்.