2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தி வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வரும் ஆதி, ஹீரோவாக நடித்திருக்கும் படம் கிளாப். அகன்ஷா சிங், பிரகாஷ்ராஜ், நாசர், கிரிஷ்கா கரூப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் பிருத்வி ஆதித்யா இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆதி ஒரு ஓட்டப்பந்தைய வீரராக நடிக்கிறார். ஒலிம்பிக் கனவுடன் ஓடும் அவரை ஊக்கப்படுத்தி தயார் செய்கிறார் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ். ஆனால் விளையாட்டுத்துறையில் இருக்கும் அரசியலில் சிக்கி அதனால் ஒரு காலை இழக்கிறார். காலை இழந்தாலும் எப்படி தான் நினைத்ததை சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள். இதில் 50 சதவிகித முட்டிக்கு கீழ் காலை இழந்தவராக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.