தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் ஓடிடி தளத்தில் முதல் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. டிவியில் மட்டுமல்லாது ஓடிடி தளத்திலும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால், பிப்ரவரி 20ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியோடு தொகுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருக்குப் பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என ஒரு கேள்வி இருந்தது. டிவியில் ஒளிபரப்பான போது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் ஒரு வாரம் மட்டுமே விலகியிருந்தார். அப்போது அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனால், அவரே இப்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், தற்போது நடிகர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இன்னும் நான்கைந்து வாரங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, சிம்புவுக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் நிகழ்ச்சிக் குழுவினர் தயாராக இருக்கிறார்களாம். அதற்கு சிம்புவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல். இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வரலாம்.
டிவியில் ஒளிபரப்பான 5வது சீசனுக்கு முந்தைய சீசன்களைப் போல அதிக வரவேற்பில்லை. கமல்ஹாசன் அரசியலில் இறங்கிய பிறகு கட்சி சார்புள்ள ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால், அடுத்த ஆறாவது சீசனை சிம்புவே தொகுத்து வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.