ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலரது நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் 'வலிமை'.
தமிழகத்தின் சென்னையில் வெளியாவதை விட கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாகி, அதிகக் காட்சிகள் திரையிடப்பட உள்ளது. சென்னையில் தமிழில் மட்டும்தான் இப்படம் வெளியாகிறது. ஆனால், பெங்களூருவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இவற்றில் தமிழ் பதிப்பு தான் அதிகத் தியேட்டர்களில் வெளியாகிறது.
பெங்களூருவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட காட்சிகள் நடைபெற உள்ளது. அஜித் நடித்து வெளிவரும் படங்களில் முதல் முறையாக அதிகக் காட்சிகள் திரையிடப்படும் படம் 'வலிமை'. இதற்கு முன்பு 'விவேகம்' படம் 450 காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் 950க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டதே இதுவரையிலான மிகப் பெரிய சாதனை என்கிறார்கள். மைசூருவிலும் 31 காட்சிகள் வரை இப்படம் திரையிடப்படுகிறது.
கர்நாடகாவில் 'மாஸ்டர்' படத்தின் வசூலை 'வலிமை' மிஞ்சுமா என்பது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.