'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உலக அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி உள்ளது. தமிழின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார்.
தற்போது ஓடிடி தளங்கள் பிரபலமடைந்திருப்பதால் டிவியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியை முதல் முறையாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் ஜனவரி 30 முதல் ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கஸ்தூரி ஏன் கலந்து கொள்ளவில்லை என அவரிடம் ரசிகர் ஒருவர் நேற்று கேட்டுள்ளார். “உங்களை அதிகபட்சம் இடிக்க வீட்டிற்குள் வனிதா காத்துக் கொண்டுள்ளார், நீங்கள் கண்டிப்பாக இருந்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். வைல்டு கார்டு மூலமாவாது நுழைய யோசியுங்கள்,' என்று கேட்ட கேள்விக்கு கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சி போலியானது என்று பதிலளித்துள்ளார்.
“எனக்கு குடும்பம் உள்ளது, அவர்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அப்போதும் இப்போதும் நச்சுத்தன்மைக்கு நேரமில்லை. பணத்திற்காக போலியான நிகழ்ச்சி பின்னால் செல்ல நேரமில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் திருப்பத்தை வேறு எங்காவது பாருங்கள்,” என்று கூறியுள்ளார்.
அதற்கு வேறொரு ரசிகர், 'போலியான நிகழ்ச்சி என்று தெரிந்துதான் 3வது சீசனில் கலந்து கொண்டீர்களா' என்று கேட்டதற்கு, 'ஆமாம், நம்பித்தான் போனேன்,' என்றும், “இந்த ஞானம் 3வது சீசனுக்கு போகறதுக்கு முன்னாடி ஏன் வரவில்லை,' என வேறொரு ரசிகர் கமெண்ட்டியதற்கு, “செத்தா தானே சுடுகாடு தெரியும்' என்றும் பதிலளித்துள்ளார்.
2019ம் ஆண்டு ஒளிபரப்பான 3வது சீசனில் 46வது நாளில் வைல்டு கார்டு மூலமாக நுழைந்த கஸ்தூரி நிகழ்ச்சியில் தாக்குப் பிடிக்க முடியாமல் 63வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எனக்கு பேமென்ட்டைத் தர மிகவும் தாமதிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இப்போது மீண்டும் ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்துள்ளார்.