நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி டைரக்சனில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரின் காம்பினேஷனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் ஆர்ஆர்ஆர். ஆனால் சோதனையாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றி வைக்கப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனா பரவல் காரணமாகவும் மற்றும் 50 சதவீத இருக்கை அனுமதி என்கிற நிபந்தனை காரணமாகவும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது
அந்தவகையில் சமீபத்தில் மார்ச்-18 அல்லது ஏப்-28 என இரண்டு தேதிகளை அறிவித்து இதில் ஏதோ ஒரு தேதியில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது மார்ச்-25ல் ஆர்ஆர்ஆர் படம் உறுதியாக ரிலீஸாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர்கள் குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் ஏதோ ஒன்றில் வெளியாகாமல் புதிய ஒரு தேதியை அறிவித்ததற்கு ஆச்சரியமான அதே சமயம் நெகிழ்ச்சியான ஒரு பின்னணியும் இருக்கிறது
அதாவது சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம் வரும் மார்ச் 17ஆம் தேதி வருகிறது அன்றைய தினம் அவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் என்கிற திரைப்படமும் வெளியாக இருக்கிறது. புனீத் ராஜ்குமாரை கவுரவப்படுத்தும் விதமாக அந்த படம் வெளியாகும்போது கர்நாடக திரையரங்குகளில் வேறு எந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஜேம்ஸ் படத்தை மட்டுமே ரிலீஸ் செய்வதற்கு கர்நாடக திரையுலகமும் திரையரங்குகள் உரிமையாளர்களும் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படம் பான் இந்தியா ரிலீஸ் என்பதால் கர்நாடகாவிலும் ஒரேசமயத்தில் ரிலீஸாக வேண்டும் அதனால் மார்ச் 18ஆம் தேதி புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் ரிலீஸ் ஆவதற்கு தாங்களும் ஒத்துழைப்பு தரும் விதமாக தங்களது பட ரிலீஸை ஒரு வாரம் கழித்து மார்ச்-25க்கு மாற்றி அறிவித்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்