சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
கொரோனா ஒமிக்ரான் அலை சற்றே குறைந்திருப்பதால் பிப்ரவரி மாதத்திற்கான புதிய தளர்வுகளை மாநில அரசு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதனால், தினசரி 4 காட்சிகளை இனி தியேட்டர்களில் நடத்த முடியும். எனவே, புதிய படங்களை வெளியிடுவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
பொங்கலுக்கு வெளிவர வேண்டிய அஜித் நடித்துள்ள 'வலிமை', மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் முக்கிய வெளியீடாய் விஷால், டிம்பிள் ஹயாதி நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' பிப்ரவரி 15க்குப் பிறகு வெளியாகலாம். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள 'டான்' படம் 'வலிமை' வெளிவந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகள் பற்றி உறுதியாகத் தெரிந்த பின்தான் மற்ற தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளைப் பற்றி முடிவு செய்வார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.