'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கொரோனா ஒமிக்ரான் அலை கடந்த மாதக் கடைசியிலிருந்து பரவ ஆரம்பித்தது. அதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய சில முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 50 சதவீத இருக்கை பிப்ரவரி 15 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கை இருந்தாலும் பழைய படி தினசரி 4 காட்சிகளை நடத்த தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வாரத்திற்கு ஒரிரு படங்களாக வெளியிட்டால் போட்டிகள் அதிகம் இல்லாமல் படங்களுக்கு வசூலைப் பெற வழி ஏற்பட்டுள்ளது. இதனால், திரையுலகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மாதத்தில் வெளிவந்த சிறிய பட்ஜெட் படங்கள் எதுவும் மக்களை வரவழைக்காத காரணத்தால் பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அடுத்த வெள்ளிக்கிழமை முதலே சில முக்கிய படங்கள் வெளிவர தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முன்னணி நடிகரின் படம் வெளிவரும் எனத் தெரிகிறது. இதனால், தியேட்டர்காரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.