சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற என்னு நிண்டே மைதீன் படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.விமல். பிருத்விராஜ், பார்வதி திருவோத், டொவினோ தாமஸ் நடித்திருந்தார்கள். ஏராளமான விருகளையும் குவித்த படம்.
அவர் இப்போது தமிழ் படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா, லால் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இங்கிலாந்து, கேரளா, தமிழ் நாட்டில் நடக்க இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது.
ஆர்.எஸ்.விமல் இதற்கு முன் கர்ணன் என்ற படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்கப்போவதாக அறிவித்தார். இந்த படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் துபாயில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. ஆனால் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பிறகு விக்ரம் நடிப்பில் தர்மராஜ்யா என்ற படம் தொடங்கப்பட்டு அதுவும் பூஜையோடு நின்று விட்டது. இப்போது மீடியம் பட்ஜெட்டில் தமிழ் படம் இயக்க இருக்கிறார்.