தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம் ஹேய் சினாமிகா. நடன இயக்குனர் பிருந்தா முதன் முறையாக இயக்கும் படம். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடித்துள்ளனர். தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடலாக அச்சமில்லை... அச்சமில்லை வெளியானது. இதனை துல்கர் சல்மான் பாடி இருந்தார். தற்போது இரண்டாவது பாடலாக, காதலியை தோழியாக வர்ணிக்கும் மெலடி பாடல் 'தோழி...'வெளியாகி உள்ளது. இதனை மதன் கார்க்கி எழுதி உள்ளார். பிரதீப் குமார் பாடி உள்ளார்.
பாடல் குறித்து இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறியதாவது: இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று 'தோழி'. படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. என்றார்.
பாடலை பற்றி பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: 'அச்சமில்லை' பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், 'தோழி' உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.